செய்திகள்

சென்னையில் மருத்துவ பரிசோதனை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் கேரள முதல்- மந்திரி

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #KeralaChiefMinister #Discharged #apollohospital

சென்னை:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. 

இதுதொடர்பாக, கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பினராயி விஜயன், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது ஏற்கனவே திட்டமிட்டது தான். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். நாளை பினராயி விஜயன் கேரளா திரும்புவார் என கூறப்பட்டது. 

இந்நிலையில், மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து இன்று மாலை சுமார் 4 மணியளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. #tamilnews #KeralaChiefMinister #Discharged #apollohospital 

SCROLL FOR NEXT