இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர் எப்.சி. அணி டெல்லி டைனமோஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று சென்னையில் இரவு 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் எப்.சி. மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் 35-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணியினர் முதல் கோலை அடித்தனர். ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர் அணியின் கலு உசே ஒரு கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-1 என சமநிலை வகித்தது.