செய்திகள்

சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் முடிவுக்கு கேரளா கடும் எதிர்ப்பு

அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அந்த முடிவை திரும்ப பெறும்படி வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மானியம் முழுவதையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறிய இந்த தகவல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.