செய்திகள்

கென்யாவில் ஓட்டல் மீது தாக்குதல்- உயிரிழப்பு 21 ஆக உயர்வு

கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. #KenyaHotelAttack #AlShabab

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர்.

SCROLL FOR NEXT