கைது 
செய்திகள்

கெலமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கெலமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெலமங்கலம்:

கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் துளசி நகர் மதுக்கடை அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஜீவா நகரை சேர்ந்த சரவணன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.