கைது 
செய்திகள்

கீரைத்துறையில் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

கீரைத்துறையில் முன்விரோத தகராறில் மூதாட்டியை தாக்கியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை கீரைத்துறை இருளாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பாக்கியம் (வயது75).

இவர் அந்த பகுதியில் சிறிய கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அகற்ற வேண்டும் என திரவியலிங்கேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் (37) கூறி வந்தார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்கியம் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு திருக்கண்ணன் தனது மகனுடன் வந்தார்.

அவர்கள் 2 பேரும் தகராறு செய்து தாக்கி விட்டு கத்தியாலும் குத்தியதாக கீரைத்துறை போலீசில் பாக்கியம் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருக்கண்ணன் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT