செய்திகள்

கீரைத்துறையில் கத்தி முனையில் பணம் பறித்தவன் கைது

கீரைத்துறையில் கத்தி முனையில் பணம் பறித்தவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் பழைய குயவர்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கீரைத்துறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பூமிநாதன் என்ற பூமி வந்தார். அவர் பாஸ்கரை வழிமறித்து பணம் கேட்டார். பாஸ்கர் கொடுக்க மறுத்ததால் கத்தியைகாட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு பூமிநாதன் தப்பிச் சென்று விட்டான்.

இது குறித்து கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி பூமிநாதனை கைது செய்தனர்.

மணிநகரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஜீவன்லால் (25). பானிபூரி வியாபாரி. இவரிடம் இருந்த செல்போனை 3 சிறுவர்கள் பறித்துச் சென்றதாக திலகர் திடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்தனர்.