பிளாஸ்டிக் பைகள் 
செய்திகள்

கீழப்பாவூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கீழப்பாவூர் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்ட கலெக்டர், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து திடீர் ஆய்வின் போது ரூ. 1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT