காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறியதால், அவர் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கே.சி.பழனிசாமி இன்று அதிமுகவில் இணைந்தார்.