செய்திகள்

WWE- யில் ஒப்பந்தம் ஆன முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் கவிதா தேவி

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கவிதா தேவி என்ற வீராங்கனை முதன்முறையாக உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் (WWE) ஒப்பந்தமான இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மாலை மலர்

தற்போது பஞ்சாப்பை சேர்ந்த கவிதா தேவி என்ற வீராங்கனை WWE-யில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் WWE-யில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிரேட் காலியின் பயிற்சி அகாடமியில் பயிற்சி எடுத்தவர். இந்தியாவில் WWE தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் கவிதா தேவி களம் இறங்க உள்ளார்.

கவிதா தேவி தனது சக மல்யுத்த வீராங்கனையுடன் மோதிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகியது. இதனைத்தொடர்ந்து துபாயில் நடைபெற்ற மயி யங் டோர்னமென்ட் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். இந்த தொடரில் டகோடா காய் என்பவருக்கு எதிராக தோல்வியடைந்தாலும், சிறப்பாக சண்டையிட்டதால் WWE-யில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.