வழக்கு பதிவு 
செய்திகள்

காவல்காரன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

காவல்காரன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தோகைமலை:

தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் காவல்காரன்பட்டிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த பூவாயிபட்டியை சேர்ந்த காமராஜ் (வயது 52), காவல்காரன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (50), வேலாயுதம் (58), ஆர்.டி. மலையை சேர்ந்த பழனிச்சாமி (50), தோகைமலையை சேர்ந்த செல்வராஜ் (43) ஆகிய 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.