செய்திகள்

கதுவா வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு- நார்கோ சோதனை நடத்த குற்றவாளிகள் வேண்டுகோள்

கதுவா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். வழக்கு விசாரணை 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. #Justiceforashifa

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது, அப்போது குற்றம்சாட்டப்பட்ட  அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.


இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.