இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன். இவர் இளவரசர் வில்லியம்மின் மனைவி ஆவார். இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் உலக மக்களை அதிகம் கவர்ந்தவர் பிப்பாமிடில்டன். இவர் இளவரசி கேத் மிடில்டனின் உடன் பிறந்த தங்கை ஆவார்.
கேத்மிடில்டனின் திருமண உடைகளில் பின்புறம் தொங்கிய துப்பட்டாவை கையில் தாங்கி பிடித்த படியே வந்தார்.
அவருக்கு லண்டனில் இன்று திருமணம் நடக்கிறது. 33 வயதாகும் பிப்பா மிடில்டன் கோடீசுவரரை மணக்கிறார். அவரது பெயர் ஜேம்ஸ் மாத்யூவ். இவர்களது திருமணம் லண்டன் அருகேயுள்ள இங்கிலீபீல்டு கிராமத்தில் உள்ள செயின்ட் மார்க் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கிறது.
இது 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயமாகும். திருமணத்தில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் (3), இளவரசி சார்லோட்(2) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.