செய்திகள்

கச்சத்தீவு திருவிழா - ராமேசுவரம் மீனவர்கள் 4 நாள் கடலில் மீன் பிடிக்க தடை

கச்சத்தீவு திருவிழாவில் மீன்பிடிக்கச் செல்ல ராமேசுவரம் மீனவர்களுக்கு 4 நாள் கடலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Katchatheevu #festival

மாலை மலர்

ராமேசுவரம்:

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு செல்ல பெயர் பதிவு செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அன்னியர் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நாளை மறுநாள் (21-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களுக்கும் மீன்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று மீன்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். #Katchatheevu #festival