செய்திகள்

காசிமேட்டில் பெண்ணுக்கு கத்திக்குத்து 4 பேர் கைது

காசிமேட்டில் பெண்ணுக்கு கத்திக்குத்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

காசிமேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மல்லிகா (46). மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர், கூட்டாளிகளுடன் வந்து தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மல்லிகாவின் வயிற்றில் சரமாரியாக குத்தி தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மல்லிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகளான கஞ்சா வியாபாரி முத்து லட்சுமி, ஜெயந்தி, ஜான், மோகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT