யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், பிரணாய், மனு- சுமித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் காஷ்யப், பிரணாய், மனு - சுமித் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மாலை மலர்
பிரணாய் ஜப்பான் வீரர் கன்டா டிசுனேயமா-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என இழந்த பிரணாய், பின்னர் 21-15, 21-18 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பிரணாய் அரையிறுதியில் வியட்நாம் வீரரை எதிர்கொள்கிறார்.