செய்திகள்

காஷ்மீரில் போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகள்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். #Policeofficerkidnapping

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.