கைதான ஜெயகாந்தன் 
செய்திகள்

கரூர் இரட்டைக்கொலை- முக்கிய குற்றவாளி இன்று மதுரையில் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

திருச்சி:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த இரட்டைக்கொலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையில் தொடர்புடைய 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரணடைந்தனர். திருச்சி கோர்ட்டில் நேற்று பிரவீன்குமார் என்பவர் சரணடைந்தார்.

இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தன் என்பவர் நேற்று திருச்சி கோர்ட்டில் சரணடைய வந்த போது திடீரென தப்பியோடினார். அவரை தனிப்படை போலீ சார் தீவிரமாக தேடி வந்த னர்.

இந்தநிலையில் இன்று மதுரையில் வைத்து ஜெயகாந்தனை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் செய்தனர்.