செய்திகள்

கரூர் மாவட்டத்தில் வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தி வெல்லம் உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்ப Öளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பியிரிட்டுள்ளனர்.  நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளுரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர்.  

பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 வரை விற்பனை செய்கின்றனர்.  வாங்கிய கரும்புகளை இயந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலரவைத்து குப்பிர கவிழ்த்தி மர சுத்தியால் தட்டுகின்றனர்.  அதிலிருந்து அச்சு வெல்லம் மள, மளவென விழுகிறது.  

அதே போல் மரத் தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலரவைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர்.  பின்னர் நன்கு உலரவைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.  தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஸ்ட்ரா, உத்ராஞ்சல், உத்திரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1250 க்கும்,  30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1300 க்கும்  வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.  

இந்த வாரம் வியாபாரிகள் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம்  உருண்டை வெல்லம் ரூ.1300-க்கும், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம்  ரூ.1350-க்கும் வாங்கிச் சென்றனர். வெல்லம் உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.