கரூர்:
தே.மு.தி.க. உட்கட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கரூர் வெங்கமேட்டில் நடந்தது.
நகர செயலாளர் காந்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேலு கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நியமன ஆணை வழங்கி பேசினார். அப்போது, தே.மு.தி.க. வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வீறுகொண்டு எழும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
கூட்டத்தில் அவை தலைவர் அரவை முத்து, பொருளாளர் அரிவின்ஸ், துணை செயலாளர்கள் குமார், கஸ்தூரி தங்க ராஜ், சோமூர் ரவி, பொதுக்குழு உறுப்பி னர்கள் முருகன்சுப்பையா, ஆல்வின், மாணவரணி நவநீதகிருஷ்ணன், வக்கீல் பாலசந்தர், மகளிரணி கமலம், ஒன்றிய செயலாளர்கள் சிவம் ராஜேந்திரன், ஜெயகுமார், சாமுவேல்மற்றும் சண்முகசுந்தரம், ஹரிகரன், துளசிமணி, மகாமணி உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.