தற்கொலை 
செய்திகள்

கருங்கல் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை

கருங்கல் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கருங்கல்:

கருங்கல்லை அடுத்த பெருமான்குழி புள்ளத்து விளை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35) தொழிலாளி.

இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார். மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதில் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று வீடு திரும்பிய அவரது பெற்றோர் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியலை அடுத்த குழியன்விளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசுவாமி. இவரது மனைவி விஜய லெட்சுமி (வயது 55).

இவருக்கு கடன் இருந்து வந்தது. இதனை அடைக்க முடியாமல் அவர் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.