கருங்கல்:
கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி லேவிசாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் கருங்கலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். குழித்தோட்டம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அந்த வழியாக பாலூர் கோவில்விளையை சேர்ந்த பிரபின் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி லேவிசாள் மீது மோதியது. இதில் லேவிசாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லேவிசாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.