கோப்பு படம் 
செய்திகள்

எம்எல்ஏ கருணாசுக்கு உடல்நலக்குறைவு - வடபழனி மருத்துவமனையில் அனுமதி

கருணாஸ் எம்எல்ஏ உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #KarunasMLA #ADMK

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ், சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபத்தில் தனது அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் அவதூறாக பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கைதான அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாஸ் எம்எல்ஏவுக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.