செய்திகள்

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DhayaluAmmal

மாலை மலர்

சென்னை:

திமுகவின் தலைவராக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 6-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பின்னர், கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்ட்டர்.

இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.