கிருஷ்ணன் 
செய்திகள்

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்- தி.மு.க. கிளை செயலாளர் மாரடைப்பால் மரணம்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து வெளியான தகவலால் தி.மு.க. கிளை செயலாளர் கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் சென்னை காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்ற இவர் அங்குள்ள நிர்வாகிகளிடம் தி.மு.க. தலைவரின் உடல்நிலை கேட்டுவிட்டு ஊருக்கு திரும்பினர்.

நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. டி.வி.யில் இந்த செய்தியை பார்த்த அவர் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.