பிச்சைமுத்து 
செய்திகள்

கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு- தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் மரணம்

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாலை மலர்

குஜிலியம்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 50). தி.மு.க. தொண்டரான இவர், பாளையத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மனவேதனை அடைந்தார். கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள, கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் சென்று வந்தார்.

மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நாளில் இருந்து மிகுந்த மனவேதனையுடனும், சோகத்துடனும் காணப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிச்சைமுத்து பரிதாபமாக இறந்தார்.