மரணம் 
செய்திகள்

கருமத்தம்பட்டி அருகே குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

கருமத்தம்பட்டி அருகே குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனுக்கு செம்மான்டம் பாளையம் ரெயில்வே தண்டவாளம் பாலத்திற்கு அருகே உள்ள குளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலமுருகன், இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் அங்கு வந்து அழுகிய நிலையில் இருந்த பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT