செய்திகள்

கார்த்தி சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர் - மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு கேட்கும் சி.பி.ஐ

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நாள் விசாரணைக்காவல் முடிந்துள்ள நிலையில், அவர் இன்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். #KartiChidambaram

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் மூன்று நாட்கள் விசாரணைக்காவலில் கடந்த 9-ம் தேதி அடைக்கப்பட்டார். அவரது காவல் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் விசாரணைக்காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவர் பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறிய அதிகாரிகள், மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்க கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வரும் 14-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KartiChidambram #INXMediaCase #CBI #TamilNews

SCROLL FOR NEXT