செய்திகள்

சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் மும்பை பைகுலா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். #KartiChidambaram

மாலை மலர்

மும்பை:

இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்று தருவதில் கார்த்தி சிதம்பரம் இடைத்தரகராக செயல்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தற்போது விசாரணைக்காவலில் இருக்கும் கார்த்தியை சி.பி.ஐ அதிகாரிகள் இன்று மும்பைக்கு அழைத்து வந்தனர். கொலை வழக்கில் பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் தனித்தனியே விசாரிக்கப்படுவார் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்திராணி முகர்ஜி முன்னர் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.#Karti Chidambaram #IndraniMukerjea #TamilNews