கார்த்தி சிதம்பரம் 
செய்திகள்

மாநகராட்சி தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: கார்த்தி சிதம்பரம்

வருகிற மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டி:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அ.தி.மு.க. ஆதரவாக தான் செயல்படுகிறது. அவர்கள் தமிழகத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அ.தி.மு.க. அரசால் சுயமாக செயல்பட முடியவில்லை. ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் ஒரு தவறான முடிவு. இதனை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டங்களாக நடைபெறும் போது உள்ளாட்சி தேர்தலை மட்டும் ஏன்? இரண்டு கட்டங்களாக நடத்தினார்கள் என்பது புரியவில்லை.

அவ்வாறு நடத்தியும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல வருகிற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். அதேபோல் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

SCROLL FOR NEXT