கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நாகேஷ் 
செய்திகள்

கர்நாடகாவில் சுயேட்சை மந்திரி திடீர் ராஜினாமா - அரசுக்கு அளித்த ஆதரவும் வாபஸ்

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

கர்நாடகா மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்றஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர்  குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த நாகேஷ், தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT