செய்திகள்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆசாமிக்கு பாதி மொட்டை, செருப்பு மாலை பரிசு

கர்நாடக மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆசாமிக்கு, அப்பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் பாதி மொட்டை அடித்து, பாவாடை கட்டி செருப்பு மாலை அணிவித்தனர்.

மாலை மலர்

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆசாமிக்கு அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே சேர்ந்து தண்டனை கொடுத்துள்ளனர்.

அந்த நபரை பிடித்து அவருக்கு தலையில் பாதி மொட்டை அடித்து, பாவாடை கட்டி, செருப்பு மாலை அணிவித்தனர். மேலும் அவரை மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பாதி மொட்டையிலும் ஏதோ வரைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆசாமிக்கு வழங்கிய இந்த நூதன தண்டனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.