ரமேஷ் மகேஷ் 
செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை

சுயேச்சை எம்எல்ஏ-வை தகுதி நீக்கம் செய்த கையோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் கர்நாடக சபாநாயகர்.

மாலை மலர்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான். அத்துடன் சுயேச்சை எம்எல்ஏ சங்கரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார்.

தற்போது காபந்து முதல்வராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதா சார்பில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியையும், மகேஷ் குமதல்லி ஆகியோரை கட்சித்தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துள்ளார்.