செய்திகள்

சோனியாவுக்கு மீண்டும் இத்தாலி சாயம் பூசும் பாஜக - கர்நாடக தேர்தலில் உச்சக்கட்ட பரபரப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக பிரசாரம் செய்து வரும் சோனியாவை இத்தாலியைச் சேர்ந்தவர் என பாஜக மீண்டும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaElection2018 #soniagandhi #bjpkarnataka

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்தி பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக சார்பாக பிரச்சாரம் செய்து வரும் மோடி மற்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வடமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடகா பாஜக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தது. அதில், இறக்குமதி செய்யப்பட்டவர்களா. நீங்கள் இவ்வளவு கீழ் தனமாக பேசுகிறீர்கள். வடக்கு-கிழக்கு என பிரித்து பேசுவது சரியல்ல. இதைப்பற்றி பேசுவதற்கு முன் நீங்கள் உங்களை நினைத்து பார்க்க வேண்டும்.

கர்நாடகா தேர்தலை முன்னிட்டு திருமதி. அண்டனியோ மைனோ (சோனியா காந்தி) இங்கு பிரசாரத்திற்காக வருகிறார். மேடம் அண்டனியோ 10 ஆண்டுகளாக இந்தியாவின் நேரம் வீணாவதற்கு காரணமாக இருந்தவர்களின் உபதேசம் கர்நாடக மக்களுக்கு தேவையில்லை என தெரிவித்திருந்தது.

சோனியாவை இத்தாலியாவைச் சேர்ந்தவர் என பாஜக குறிப்பிடுவது இது முதல் முறையன்று. தேர்தல் பிரசாரத்தின் போது பல முறை பாஜக-வினர் சோனியாவை இத்தாலியைச் சேர்ந்தவர் எனக்குறிப்பிட்டிருந்தனர். #KarnatakaElection2018 #soniagandhi #bjpkarnataka

SCROLL FOR NEXT