கோப்புபடம் 
செய்திகள்

காரிமங்கலத்தில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

காரிமங்கலம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரிமங்கலம்:

காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். 

அப்போது கும்பாரஅள்ளி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 22) என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வாலிபர், மாணவியுடன் கோவையில் உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாலிபரை கைது செய்து மாணவியை மீட்டனர். 

தொடர்ந்து மாணவி மற்றும் வாலிபரை பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.