செய்திகள்

புதுவரவு : கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார்பன் ஔரா பவர் 4ஜி பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்பன் ஔரா 4ஜி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கார்பன் ஔரா 4ஜி ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

கார்பன் புதுவரவு ஸ்மார்ட்போனான ஔரா பவர் 4ஜி பிளஸ் வோல்ட்இ வசதி கொண்டு 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளதோடு 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கார்பன் ஔரா 4ஜி பிளஸ் 400 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்பை மற்றும் 16 மணி நேர டாக்டைம் வழங்கும் என கார்பன் தெரிவித்துள்ளது. 

கார்பன் ஔரா பவர் 4ஜி பிளஸ் சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் எச்டி டிஸ்ப்ளே 

* 1.325 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்

* 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.0 இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட் 

* 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் 

* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்

* 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

* 4000 எம்ஏஎச் பேட்டரி

சாம்பல் மற்றும் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கும் கார்பன் ஔரா பவர் 4ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, இலவசமாக பாதுகாப்பு கவர் ஒன்றும் வழங்கப்படுகின்றது.