கோப்பு படம் 
செய்திகள்

கண்ணமங்கலம் அருகே மூதாட்டி மரணம்: போலீசில் புகார்

கண்ணமங்கலம் அருகே மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம், வி.வி.தாங்கல் கிராமத்தை சேர்ந்த குமாரி (வயது60) கடந்த 3 ஆண்டுகளாக கண்ணமங்கலம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் குமாரிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், குமாரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக குமாரியின் மகன் பிரபு கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.