செய்திகள்

கருணாநிதியை பிறந்தநாள் வாழ்த்து கவிதையால் நெகிழவைத்த கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதிக்கு, அவரது மகளும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி எழுதிய பிறந்த நாள் வாழ்த்து கவிதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாலை மலர்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்னை கோபலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இதனிடையே, திமுக தலைவருக்காக தான் எழுதிய பிறந்தநாள் கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டு இருந்தார். 

கனிமொழி வெளியிட்ட கவிதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் வைரவிழா நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக திமுக சார்பில் சென்னையில் இன்று கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.