கனிமொழி 
செய்திகள்

எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று மறுபடியும் பாட வேண்டும்- கனிமொழி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இந்தநிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

எந்த குரல் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்து கொண்டதோ அந்த குரலுக்கு சொந்தக்காரர் உடல் நலம் பெற வேண்டும் என்று கனிமொழி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்.பி.பி.  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.