செய்திகள்

கட்டப்பஞ்சாயத்து யார் செய்தாலும் தவறு: கனிமொழி எம்.பி.

கட்டப்பஞ்சாயத்து யார் செய்தாலும் அது தவறுதான் என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதும், கலைகளில் தலையிடுவதும் நிச்சயமாக மக்களின் உரிமைக்கு எதிரான ஒன்று. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கருத்து சுதந்திரம் இல்லாத ஒரு சூழ்நிலையை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று.

கே:- கட்டப்பஞ்சாயத்து நடத்தி நிலத்தை அபகரிப்பவர் திருமாவளவன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக கூறி உள்ளாரே?

ப:- கட்டப்பஞ்சாயத்து யார் செய்தாலும் அது தவறுதான். இதை தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.