விபத்து 
செய்திகள்

காங்கயம் அருகே மொபட்டில் சென்ற ஆட்டு வியாபாரி பலி

காங்கயம் அருகே மொபட்டில் சென்ற ஆட்டு வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காங்கயம்:

காங்கயம் அருகே உள்ள கொடுவாய் நாட்டான் வலசை சேர்ந்தவர் அய்யாவு (வயது 48). ஆட்டு வியாபாரி.

இவர் நாட்டான் வலசில் இருந்து கொடுவாய்க்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர் பாராதவிதமாக அய்யாவு வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அய்யாவு உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.