செய்திகள்

மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசுவதாக மிரட்டிய காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் குண்டு வீசுவதாக மிரட்டிய காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்.

சென்னை:

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய வாலிபர், “தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டை வீசுவோம்” என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் மிரட்டல் போன் வந்த செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கினர். அப்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

செல்போன் நம்பரை வைத்து மிரட்டல் விடுத்த வாலிபர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடிப்பதற்காக காஞ்சிபுரம் விரைந்துள்ள போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பொறுத்து கொள்ள முடியாமல்தான் மர்ம வாலிபர் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருப்பினும் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர்தான் மிரட்டலுக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

SCROLL FOR NEXT