செய்திகள்

கமுதி அருகே திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தற்கொலை

கமுதி அருகே திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

கமுதி அருகே மண்டல மாணிக்கத்தை அடுத்துள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் தவமணிகண்டன் (வயது 21). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால் சில நாட்களிலேயே அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி தகராறு ஏற்பட மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தவமணிகண்டன் பலமுறை மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் தவ மணிகண்டன் விரக்தியுடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று வாழ்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மண்டல மாணிக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.