செய்திகள்

கமுதி அருகே பள்ளி வாகனம் மோதி 1½ வயது குழந்தை பலி

கமுதி அருகே தனியார் பள்ளி வேன் மோதியதில் 1½ வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.

கமுதி:

கமுதி அருகே உள்ள நந்திசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி சோபனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மலைச்சாமி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

மூத்த மகள் தர்ஷிகா (வயது 5). நந்திசேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷிகா தினமும் பள்ளிக்கு வேனில் செல்வார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வேனில் ஊருக்கு வந்து இறங்கும்போது தாய் சோபனா இளைய மகள் தேவிகாவுடன் (வயது 1½) அழைத்துச்செல்ல வந்தார். எதிர்பாராத விதமாக குழந்தை தேவிகா வேனின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.

பள்ளி வேனை சம்பகுளத்தை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டினார்.விபத்து குறித்து அபிராமம் போலீசில் சோபனா அளித்த புகாரின் பேரில் வேன் ஓட்டுநர் சக்திவேல் மீது இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் மருது பாண்டி வழக்குப்பதிவு செய்தனர். வேன் டிரைவர் சக்திவேலை கைது செய்தனர்.