செய்திகள்

டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை

டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது.

லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடிய இருவரும் 209 ரன்கள் குவித்தனர். இதில் கம்ரான் அக்மல் 71 பந்துகளை சந்தித்து 150 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் அடங்கும். சல்மான் பட் 49 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.


71 பந்தில் 150 ரன்கள் குவித்த கம்ரான் அக்மல்