செய்திகள்

கமல் அறியாமையில் பேசுகிறார்: உதயநிதி ஸ்டாலின்

கிராம சபை கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. கமல் அறியாமையில் பேசுகிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin

மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘‘சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன். நான் நடத்திய கிராம சபை கூட்டத்தை திமுக காப்பி அடிக்கிறது’’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் ‘‘கமல் அறியாமையில் பேசுகிறார். கிராம சபை கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. கமலின் தொடர் விமர்சனங்களுக்கு தக்க பதில் தரப்படும்’’ என்றார்.