புதுச்சேரி:
புதுவை மணவெளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக ரீதியாக கவர்னருக்கு எதிரான போராட்டம் தொடரும்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது என்பது அவரது விருப்பம். அதை தடுக்கவோ எதிர்க்கவோ கருத்து கூறவோ என்னால் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.