பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 500 பேர் கமல் கட்சியான “மக்கள் நீதி மய்யத்தில்” இணைய முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் பூவை ஜெகதீஷ்குமார் தலைமையில் ஆட்டோ, வேன், கார் போன்றவற்றில் ஊர்வலமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.
பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது:-
உங்களுடைய அடையாளம் உங்களுடைய நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான். அதுதான் எனது தாழ்வான வேண்டுகோள். எங்கேயாவது ஒரு இடத்தில் கறை இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அதை சரி செய்ய வேண்டும். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இங்கு நேர்மைக்கு பெரிய மரியாதை உண்டு. அந்த மரியாதைக்காகத்தான் உங்களை பார்க்க வந்தேன். வேலை நிறைய இருக்கிறது. அதை செய்ய வேண்டும். வந்தவர்களை வரவேற்க வேண்டியது தான் எனது விருப்பம்.
நேர்மையுடன் மக்களுக்கு செயலாற்ற வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கே எனது கட்சியில் இடம் உண்டு.