சென்னை:
மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஓபிசி இட ஒதுக்கீட்டில் சென்னை ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, ஓபிசி இட ஒதுக்கீட்டில் ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தரவேண்டும். சமூகநீதி காத்திட தாமதமோ, மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.