நிர்மலா சீதாராமன் - கமல்ஹாசன் 
செய்திகள்

அல்வாவில் ஆரம்பித்து அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல்ஹாசன் ‘ஹைக்கூ’ விமர்சனம்

அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

மாலை மலர்

பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்.

இந்த பட்ஜெட் தொடர்பாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ’அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது’ என விமர்சித்துள்ளார்.